×

வீட்டில் சோதனையிட்டபோது சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற பிரபல ரவுடி கைது

விழுப்புரம், நவ. 16: வீட்டில் சோதனையிட்டபோது எஸ்ஐயை கொல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், சரித்திரபதிவேடு குற்றவாளிகளை தணிக்கை செய்து அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு போலீசார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் சரித்திரபதிவேடு குற்றவாளிகளின் வீட்டுக்கு சென்று தணிக்கை செய்து வருகின்றனர். அதன்படி விழுப்புரம் கிழக்கு பாண்டிரோட்டை சேர்ந்த பிரபல ரவுடியான அப்பு(எ) கலையரசன்(28) என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நகர காவல் நிலைய எஸ்ஐ மகாலிங்கம் தலைமையிலான போலீசார் தணிக்கை செய்ய சென்றபோது அப்பு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் எஸ்ஐ மகாலிங்கத்தை வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் சுதாரித்துக்கொண்டு கீழே குனிந்ததால் அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து எஸ்ஐ மகாலிங்கம் அளித்த புகாரின்பேரில் பிரபல ரவுடி அப்பு மீது கொலை முயற்சி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post வீட்டில் சோதனையிட்டபோது சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற பிரபல ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி