×

விதைநெல், இடுபொருட்கள் விநியோகம்

வாடிப்பட்டி, நவ. 16: வாடிப்பட்டி வட்டார வேளா ண்மை உதவி இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது சம்பா நெல் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. வாடிப்பட்டி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சான்று பெற்ற நெல் விதைகளான கோ 51, என்.எல்.ஆர் 34449 மற்றும் ஏ.எஸ்.டி 16 ஆகியவை மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (நெல்), பாஸ்போபாக்டீரியா, பொட்டாஸ் மொபிலைசிங், பேக்டீரியா மானிய விலையில் வழங்கப்படுகிறது. உயிர் உரங்கள் உர பயன்பாட்டினை குறைப்பதுடன், தரமான பயிர்களை பெற உதவும். மேலும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலுக்கான நுண்ணூட்ட சத்துக்களான இரும்பு, மாக்னீஸ், துத்தநாகம், தாமிரம், போரான் மற்றும் மாலட்டினம் அடங்கிய நுண்சத்துக்கள் பயிர்களுக்கு குறைந்த அளவில் மற்றும் அத்தியாவசிய தேவையான நெல், தென்னை நுண்சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்தான சூடோமோனாஸ் விரிடி மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

The post விதைநெல், இடுபொருட்கள் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Assistant Director ,Wadipatti Regional ,Velha Nami Bandi ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் கருவிகள்