×

ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ. 16: மதுரை மாநகராட்சி 24 வது வார்டுக்கு உட்பட்ட லெனின்தெரு, ஜீவா ரோடு, எம்ஜிஆர் தெரு, ராஜிவ் காந்தி தெரு, பூந்தமல்லி நகர் ஆகிய பகுதிகளில் தொடர் மழை மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக தெருக்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், இப்பகுதியினர் இந்த தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்பகுதியில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், தண்ணீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டனர். பின் அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

The post ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Lenin Road, Jeeva Road, MGR Street, Rajiv ,Ward ,Madurai Corporation ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு...