×

வங்கதேசத்தில் ஜனவரி 7ல் பொதுத் தேர்தல்

டாக்கா: வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் வங்கதேசத்தின் 12வது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் காசி ஹபிபுல் வெளியிட்டுள்ளார். வங்க தேசத்தில் ஜனவரி 7ல் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 30 . வேட்பு மனுக்கள் பரிசீலனை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 17. டிச.18ல் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். தேர்தல் பிரச்சாரம் டிசம்பர் 18 முதல் ஜனவரி 5 நள்ளிரவு வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வங்கதேசத்தில் ஜனவரி 7ல் பொதுத் தேர்தல் appeared first on Dinakaran.

Tags : General ,Bangladesh ,Dhaka ,Bangladesh Nationalist Party ,Jamaat-e-Islami ,government ,Sheikh Hasina ,General Election ,Dinakaran ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...