×

உள்நாட்டு போர் தீவிரம் மியான்மரை சேர்ந்த 5,000 பேர் அகதிகளாக மிசோரமில் தஞ்சம்: 45 ராணுவத்தினரும் சரணடைந்தனர்

அய்ஸ்வால்: மியான்மரில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மியான்மர் மக்கள் 5,000 பேர் மிசோரமில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் ராணுவத்துக்கும், மக்கள் பாதுகாப்பு படைக்கும் இடையே உள்நாட்டு பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மியான்மரின் சின் மாநிலத்திலுள்ள ரிஹ்காவ்தார், கவ்மாவி பகுதிகளில் மியான்மர் ராணுவ வீரர்கள் மீது மக்கள் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சின் மாநிலத்திலுள்ள மக்கள் பாதுகாப்பு படையினரின் முகாம்கள் மீது மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட கவ்மாவி, ரிஹ்காவ்தர் மற்றும் அண்டை பகுதிகளை சேர்ந்த 5,000 பொதுமக்கள் மிசோராமில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து மிசோரம் காவல்துறை உயரதிகாரி கூறும்போது, “மியான்மர் ராணுவ தாக்குதலால் மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் மியான்மர் மக்கள் 5,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் காயமடைந்துள்ள பலர் அய்ஸ்வால் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மியான்மர் ராணுவ வீரர்கள் 45 பேர் மிசோரம் காவல்துறையில் சரணடைந்துள்ளனர். அவர்கள் அசாம் ரைபிள்ஸ் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் இந்திய ராணுவ வீரர்களால் விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்” என்று தெரிவித்தார்.

The post உள்நாட்டு போர் தீவிரம் மியான்மரை சேர்ந்த 5,000 பேர் அகதிகளாக மிசோரமில் தஞ்சம்: 45 ராணுவத்தினரும் சரணடைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Civil War ,Myanmarese ,Mizoram ,Aizawl ,war ,Myanmar ,Dinakaran ,
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி