×

50வது ஒருநாள் சதம்! சச்சினை முந்தினார் கோஹ்லி

* சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சினுடன் முதலிடத்தை (49 சதம்) பகிர்ந்துகொண்டிருந்தார் கோஹ்லி. நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மும்பையில் நடந்த அரையிறுதியில் தனது 50வது சதத்தை விளாசி உலக சாதனை படைத்ததுடன் சச்சினை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கும் முன்னேறி அசத்தினார். நடப்பு தொடரில் இது அவரது 3வது சதமாகும்.

* 4வது உலக கோப்பை தொடரில் விளையாடும் கோஹ்லி, நாக்-அவுட் ஆட்டம் ஒன்றில் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

* ஒரு உலக கோப்பையில் அதிக ரன் குவித்த சச்சினின் (673 ரன்) சாதனையையும் கோஹ்லி நேற்று முறியடித்தார். நடப்பு தொடரில் அவர் இதுவரை 10 போட்டியில் 711 ரன் (அதிகம் 117, சராசரி 101.57, சதம் 3, அரை சதம் 5) குவித்து முதலிடம் வகிக்கிறார்.

* ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் சாதனையை (13,704 ரன்) முறியடித்த கோஹ்லி (13,794 ரன்) 3வது இடத்துக்கு முன்னேறினார். இந்த பட்டியலில் சச்சின் (18,426 ரன்), இலங்கையின் சங்கக்கரா (14,234 ரன்) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

பிரதமர் வாழ்த்து

* ஒருநாள் போட்டிகளில் 50வது சதம் விளாசி சச்சின் சாதனையை முறியடித்த கோஹ்லிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X வலைத்தள பக்கத்தில் அவர் பதிந்துள்ள தகவலில், ‘கோஹ்லியின் இந்த சாதனை மைல்கல் அவரது அயராத உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும், அசாத்தியமான திறமைக்கும் சான்றாக விளங்குகிறது. அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் தலைமுறைக்கு, அவர் தொடர்ந்து புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

The post 50வது ஒருநாள் சதம்! சச்சினை முந்தினார் கோஹ்லி appeared first on Dinakaran.

Tags : 50th ODI century ,Kohli ,Sachin ,Dinakaran ,
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...