×

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியில் இருந்த சென்னையில் 113 போக்குவரத்து சிறப்பு எஸ்ஐக்கள் டிரான்ஸ்பர்: தலைமையிட கூடுதல் கமிஷனர் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் ஒரு இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் முதல், இரண்டாம் நிலை காவலர்கள் வரை பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 113 சிறப்பு உதவி ஆய்வாளர்களை மாநகர போக்குரவத்து கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலங்களுக்கு பணியிடமாற்றம் செய்து மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 113 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் போக்குவரத்து காவல் நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியில் இருந்த சென்னையில் 113 போக்குவரத்து சிறப்பு எஸ்ஐக்கள் டிரான்ஸ்பர்: தலைமையிட கூடுதல் கமிஷனர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Police ,
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...