×

எண்ணூர், நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

சென்னை: எண்ணூர், நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையோரம் அதிகமான காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

குமரி கடற்பகுதி மற்றும் தூத்துக்குடி கடற்பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் கடலில் சூழல் காற்றாக வீச கூடும் என்பதாலும், மழைக்கு வாய்ப்புள்ளதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி போன்ற துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும். சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் கடற்பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் 1ம் ஏன் புயல் எச்சரிக்கை கூண்டு எற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

The post எண்ணூர், நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Chennai ,Tulur ,Nagai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...