×

வாழ்நாளில் பெரும் பகுதியை மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் சங்கரய்யா: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

சென்னை: வாழ்நாளில் பெரும் பகுதியை மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் சங்கரய்யா என எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான திரு.சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி திரு.சங்கரய்யா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வாழ்நாளில் பெரும் பகுதியை மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் சங்கரய்யா: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Shankaraiah ,Edappadi Palaniswami Pugajanjali ,Chennai ,Edappadi Palaniswami ,Sankaraiya ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்