×

உத்தரகாண்டில் சுரங்கப் பாதையில் 3 நாட்களாக சிக்கித் தவிக்கும் 40 தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் போராட்டம்

உத்தரகாசி: உத்தரகாண்டில் சுரங்கப் பாதையில் 3 நாட்களாக சிக்கித் தவிக்கும் 40 தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்கியாரா- தண்டல்கான் இடையே மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுரங்கப் பாதையின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்தது. இதில், வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சிக்கினர். 160க்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் ஆகியவையும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இன்றும் தொடர்கிறது.40 தொழிலாளர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு சுரங்கப்பாதையை பாறைகள் அடைத்துக் கொண்டன.72 மணி நேரம் ஆகியும் தொழிலாளர்கள் மீட்கப்படாததால் சக தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அவர்கள் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தி சுரங்கப்பாதை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.. இச்சம்பவத்தின் எதிரொலியாக, உத்தரகாண்ட் அரசு விபத்து குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவுக்கான காரணங்களை ஆய்வு செய்ய, உத்தராகண்ட் அரசு அமைத்த குழுவில் உள்ள நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

The post உத்தரகாண்டில் சுரங்கப் பாதையில் 3 நாட்களாக சிக்கித் தவிக்கும் 40 தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Uttarakasi ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ