×

கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய அரசு பேருந்து

*அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் பகுதியில் சிதம்பரத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுபாட்டை இழந்து நெல் வயலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை 3 மணியளவில் அரசு பேருந்து சிதம்பரத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி ஓரத்தூர் (கிளியனூர் கோனாத்து முக்கூட்டு அருகே) பகுதியில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்றது.

அப்போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையை விட்டு விலகி அருகில் உள்ள நெல் வயலில் இறங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். யாருக்கும் காயம் ஏற்படாமல் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறுகையில், இதே வளைவு பகுதியில் ஏற்கனவே பேருந்துகள் கட்டுபாட்டை இழந்து விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த வளைவு பகுதியில் உள்ள தார்சாலை குறுகலாகவும், தாழ்வாகவும் உள்ளது எனவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தார் சாலையின் அகலத்தை அதிகரித்து சாலை அமைத்தால் மட்டுமே விபத்து நடைபெறுவதை தடுக்க முடியும் என கூறினர். இந்த விபத்து குறித்து ஒரத்தூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய அரசு பேருந்து appeared first on Dinakaran.

Tags : Chethiyathoppu ,Chidambaram ,Srimushnam ,Orathur ,Cuddalore district ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி