×

அனைத்து வட்டங்களிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்: 18ம் தேதி நடக்கிறது

திருவள்ளூர், நவ.15: திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் சிறப்பு முகாம் வரும் 18ம் தேதி நடைபெறும் என கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் வட்டத்தில் நல்லாங்காவனூர் கிராம நியாயவிலைக் கடை அருகிலும், ஊத்துக்கோட்டை வட்டத்தில் அனந்தேரி கிராம நியாய விலைக் கடை அருகிலும், பூந்தமல்லி வட்டத்தில் படூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், திருத்தணி வட்டத்தில் மாம்பாக்கம் சத்திரம் கிராம நியாய விலைக் கடை அருகிலும் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது.

பள்ளிப்பட்டு வட்டத்தில் நெடுகல் கிராம நியாய விலைக் கடை அருகிலும், பொன்னேரி வட்டத்தில் மெதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் குருத்தானமேடு கிராம நியாய விலைக் கடை அருகிலும், ஆவடி வட்டம் நெமிலிசேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், ஆர்.கே.பேட்டை வட்டத்தில் சந்திரவிலாசபுரம் கிராம நியாயவிலைக் கடை அருகிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. எனவே சிறப்பு முகாம்கள் நடைபெறும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவுசெய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறும், மேற்படி அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அனைத்து வட்டங்களிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்: 18ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,
× RELATED புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில்...