- அமைச்சர்
- கீதாஜீவன்
- புல்தாரை விளையாட்டு மைதா
- பொல்பெட்டா
- தூத்துக்குடி
- கீதாஜீவன்
- JMJ செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம்
- தூத்துக்குடி போல்பெட்
- ஆக்டிவ் புல்தாரி விளையாட்டு
தூத்துக்குடி, நவ. 15: தூத்துக்குடி போல்பேட்டையில் ஜேஎம்ஜே செயற்கை புல்தரை விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். தூத்துக்குடி போல்பேட்டையில் ஜேஎம்ஜே செயற்கை புல்தரை விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கிரிக்கெட் பயிற்சி செய்வதற்கு தனித்தனி நெட் வசதியும், கால்பந்து மற்றும் பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவதற்கும் வசதிகள் உள்ளன. மேலும் சிறுவர்களுக்காக கிரிக்கெட் பயிற்சி கூடமும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து விளையாட்டுகளை தொடங்கி வைத்தார். இதில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை தலைவர் ஜீவன்ஜேக்கப், தொழிலதிபர் சுதன்கீலர், சுதாசுதன், டாக்டர்கள் மகிழ்ஜான் சந்தோஷ், கீர்த்தனா மகிழ், அஜய், சுஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post போல்பேட்டையில் செயற்ைக புல்தரை விளையாட்டு மைதானம் திறப்பு விழா அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.