×

கூட்டுமங்கலம் விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா

குளச்சல், நவ. 15: மண்டைக்காடை அடுத்த கூட்டுமங்கலத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மணிகண்டன் தலைமை வகித்தார். தாளாளர் ரெஜீஷ் கிருஷ்ணன், முதல்வர் தங்கசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் ஜயப்பா மகளிர் கல்லூரி முதல்வர் அஞ்சனா, ஏ.டி.எஸ்.பி.க்கள் சகாய ஜோஸ், மதியழகன், டி.எஸ்.பி. நாராயணன், தனியார் பள்ளி டி.இ.ஒ. முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பெங்களூரூ தனியார் நிறுவன இயக்குனர் அஷ்வின் ராம்நாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பத்ம, ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் பொன்னுலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பூவலிங்கம், துணைத் தலைவர் கிரி, சட்ட ஆலோசகர் பிரேம்ஜித் கவுதம், அஜய்குமார், சாய்குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post கூட்டுமங்கலம் விவேகானந்தா பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Juttamangalam Vivekananda School ,Annual Celebration ,Kulachal ,Secondary School ,C.P.S.E. Sports ,Juthamangalam Vivekananda ,School Annual Celebration ,Dinakaran ,
× RELATED குஜிலியம்பாறை அருகே அரசு பள்ளி ஆண்டு விழா