×

ஜேம்ஸ் டவுண் எல்எம்எஸ் பள்ளியில் உணவு விழா

அஞ்சுகிராமம்,நவ.15: அஞ்சுகிராமத்தை அடுத்த ஜேம்ஸ் டவுண் எல்எம்எஸ் மேல்நிலைப் பள்ளியில் உணவு விற்பனை விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் (பொ) டேவிட்சன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தாளாளர் வக்கீல் சாம் சுரேஷ்குமார் கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் இட்லி, தோசை பரோட்டா, பிரியாணி, குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இதில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

The post ஜேம்ஸ் டவுண் எல்எம்எஸ் பள்ளியில் உணவு விழா appeared first on Dinakaran.

Tags : Food Festival ,James ,Town LMS School ,Anjugram ,James Town LMS High ,School ,James Town LMS School ,Dinakaran ,
× RELATED இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்...