×

திமுக பூத் முகவர்கள் கூட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து குறைகள் கேட்க தீர்மானம்

கருங்கல், நவ.15: கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் குறும்பனை மீனவர் கிராமம் முதல் ராமன்துறை வரையிலான பூத் முகவர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. திமுக கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் தங்கத்துரை, ஒன்றிய கவுன்சிலர் தேவதாஸ், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அபிஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. குறும்பனை முதல் ராமன்துறை வரையிலான கிராமங்களை சார்ந்த பூத் முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிய தீர்மானிக்கப்பட்டது. மேலும் பூத் முகவர்களுடன் சென்று வாக்காளர்களை சந்திப்பது, தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜீன், பெதலிஸ், லயோலியன், ஜோசப், சீலன், லீலா, ஆண்டனி, பெர்சலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக பூத் முகவர்கள் கூட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து குறைகள் கேட்க தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Karungal ,Killiyur South Union DMK ,Kurmapanai ,Ramanthurai ,
× RELATED முதல்வர் குறித்து அவதூறு ஐடி கம்பெனி ஊழியர் கைது