×

மனைவி மாயமானதால் விஷம் குடித்த வாலிபர்

சேலம், நவ.15: சேலம் அம்மாபேட்டை குமரகிரிப்பேட்டை பஞ்சாயத்து வீதியை சேர்ந்தவர் குணசேகரன்(37). இவருக்கு மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை. இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கவில்லை. அதேபகுதியை சேர்ந்த சரவணன் என்பவரையும் காணவிaல்லை. இதனால் அவர் மீது குணசேகரனுக்கு சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். அதற்கான ரசீதை போலீசார் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மனைவி-குழந்தையை காணவில்லை என்ற வேதனையில் இருந்து வந்த குணசேகரன் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி மாயமானதால் விஷம் குடித்த வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Salem ,Gunasekaran ,Kumaragirippet Panchayat Road, ,Ammapet, Salem ,Dinakaran ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு