×

வத்திராயிருப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்

 

வத்திராயிருப்பு, நவ.15: வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்துள்ள போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்திற்கு வத்திராயிருப்பு பேரூராட்சி தலைவர் தவமணி பெரியசாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேசிய நிர்வாக குழு உறுப்பினருமான ராமசாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் பேசினர். இந்த பிரச்சார இயக்கத்தில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பெனரி, வத்திராயிருப்பு நகரச் செயலாளர் பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post வத்திராயிருப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Palestine ,Occupied Territories ,Vathirairipu ,Communist Party of India ,Marxist Communist Party ,Muthalamman Bazar ,
× RELATED காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு