×

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை மறித்து முள்வேலி அமைக்க கூடாது; விஸ்வநத்தம் ஊராட்சி தலைவர் கோரிக்கை

 

சிவகாசி, நவ.15: இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்நாகராஜ் மனு அளித்தார். மனுவில், ‘‘சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சியில் சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது இந்த இடம் தரிசு நிலமாக முள் செடிகள் படர்ந்து காணப்படுகிறது. இந்த இடத்தில் சுமார் 150 மீட்டர் நீளத்திற்கு ஓ.பி.ஆர் நகர், பெரியார் நகர், டிப்ஜி நகர், ஏ.ஆர் நகர் போன்ற குடியிருப்பு கிராம மக்கள் அணுகு சாலையாக கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த கோவில் இடத்தை சுற்றி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக முள்வேலி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த பாதையில் முள்வேலி அமைத்தால் இப்பகுதி மக்கள் 1 கிலேமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். 5 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே பொது மக்களின் நலன் கருதி பாதையை மறிக்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ெதரிவித்துள்ளார்.

The post பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை மறித்து முள்வேலி அமைக்க கூடாது; விஸ்வநத்தம் ஊராட்சி தலைவர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Barbed fence ,Viswanantham ,panchayat ,Sivakasi ,Viswanatham Panchayat Council ,Sakthivelnagaraj ,Joint ,Commissioner ,Hindu Religious Charities Department.… ,Viswanantham panchayat ,Dinakaran ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை