×

மழைநீர் பாதிப்பில் இருந்து பயிர்களை காக்க ஆலோசனை

 

சிவகங்கை, நவ.15: சிவகங்கை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. மழை நீரில் பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டால் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி குன்றி மகசூல் பாதிக்கப்படும். இவ்வாறு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நெல் பயிரில் தேங்கிய மழை நீரை உடனடியாக வடிக்க வேண்டும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு ஊற வைத்து மறு நாள் இந்த கலவையுடன் பொட்டாஷ் கலந்து வயலில் இட வேண்டும். உளுந்து, கடலை பயிர்கள் மழை நீரில் மூழ்கினால் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். பருவ மழையின் போது பலத்த காற்று வீசும் என்பதால் தென்னை மரங்களில் முதிர்ந்த காய்கள் மற்றும் இளநீரை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். அடிப்பாகத்தில் மண்ணை குவித்து ஸ்திரத்தன்மை ஏற்படுத்த வேண்டும். நீர் பாய்ச்சுதல் மற்றும் உரமிடுதலை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மழைநீர் பாதிப்பில் இருந்து பயிர்களை காக்க ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai District Seed Certification and Organic Certification ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்