×

சிறுவனிடம் பணம் பறித்த வாலிபர் கைது

 

கமுதி, நவ.15: கடலாடி அருகே ஆப்பனூரில் நேற்று முன்தினம் கபடி போட்டி நடைபெற்றது. இதில் மறவர் கரிசல் குளத்தைச் சேர்ந்த வசந்தகுமார்(17),வினித் (17),கண்ணமாரி(17) ஆகிய மூன்று சிறுவர்களும் விளையாடி விட்டு இரவு டூவீலரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஒச்சத்தேவன் கோட்டை கிராமம் அருகே சென்ற போது, அக்கிராமத்தை சேர்ந்த வாலிபர் சண்முகநாதன் (28) என்பவர் வசந்தகுமாரை அடித்து, அரிவாளை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் இருந்த ரூ.4,500 பணத்தை வழிப்பறி செய்துள்ளார். இது குறித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் வசந்தகுமார் அளித்த புகாரின் பேரில்,போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுவனிடம் பணம் பறித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Appanur ,Cuddaly ,Karisal pond ,Dinakaran ,
× RELATED கிருதுமால் நதி தரைப்பாலம் சேதம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை