×

லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயம்

 

திருமங்கலம், நவ. 15: திருமங்கலம் அருகே முன்னாள் சென்ற லாரி மீது ஆம்னிபஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து தென்காசிக்கு நோக்கி நேற்று அதிகாலை ஆம்னி பஸ் பயணிகளுடன் சென்றது. திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் தியாகராஜர் மில் அருகே சென்ற போது ஆம்னி பஸ், முன்னாள் சென்ற நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரியை முந்த முயன்றது. அப்போது எதிர்பாராவிதமாக ஆம்னி பஸ், லாரியில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தினை சேர்ந்த விஜயகுமார் (40), சந்தனமாரி (32), சரவணன் (33), உமையாகுரு (35), திருவில்லிபுத்தூர் மணிமாறன் (40), வத்திராயிருப்பை சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (44), நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூரினை சேர்ந்த செல்வம் (24), பஸ் டிரைவர் திருச்சியை சேர்ந்த ஜான்சன் (58) உள்பட 12 பேர் காயமடைந்தனர். தகவலறிந்ததும் திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக 8 பேர் மதுரை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் நிற்காமல் சென்ற லாரி குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

The post லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Thirumangal ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி