×

காரைக்காலில் இருந்து பேரளம் வரை துறைமுகத்தில் படகுகள் நிறுத்தம்

 

காரைக்கால்,நவ.15: காரைக்காலில் இருந்து பேரளம் வரை ரயில்பாதை அமைக்கும் பணி 80% நிறைவு பெற்றுள்ளது. 2024ல் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்கால் பேரளம் ரயில் பாதை திட்டமானது சுமார் 23.55 கி மீ நீளம் கொண்டதாகும். தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவால் மேற்கொள்ளப்படும். இந்த ரயில் வழி பாதை முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டமாகும். இந்த கிளை பாதையானது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலையும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளத்துடன் இணைப்பது டன் 6 ரயில் நிலையங்கள் சேவை செய்யப்படுகிறது.

பிரெஞ்சு காலத்தில் காரைக்கால் மற்றும் பேரளம் இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை 1980களின் மத்தியில் மூடப்பட்டது. பின்னர் முப்பது ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு காரைக்கால் மற்றும் பேரளம் இடையேயான ரயில் இணைப்பை இந்தப் புதிய ரயில் பாதை மீட்டெடுக்கவும், மின்மயமாக்கல் உட்பட ரூ.320.64 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பேரளம் ரயில் பாதை திட்டத்தில் 1 பெரிய பாலம், 77 சிறிய பாலங்கள்,1 மேம்பாலம்,1 ரூபேண்ட்,21 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.பேரளம் காரைக்கால் இடையே அம்பகரத்தூர் (ஹால்ட்), பத்தக்குடி (ஹால்ட்), திருநள்ளார், கோவில்பத்து (ஹால்ட்) நான்கு ரயில் நிலையங்கள் அமைகின்றன. தற்போது வரை திருநள்ளாறு ரயில் நிலையத்தில் 80% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அம்பகரத்தூரில் ரயில் நிலையத்தில் கட்டிடத்திற்கு அடித்தளம் நிறைவடைந்து உள்ளது. பேரளம் மற்றும் திருநள்ளாறு இடையே 20% மண் நிரப்பும் வேலை முடிந்து உள்ளது.

The post காரைக்காலில் இருந்து பேரளம் வரை துறைமுகத்தில் படகுகள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Peralam ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை...