×

காதலனுடன் இளம்பெண் ஓட்டம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: பெருந்துறை அருகே பரிதாபம்

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மனைவி மல்லிகா (60). இவருக்கு அமுதா (30), பூவிழி (28) என்ற மகள்கள். அமுதாவிற்கு, 10 ஆண்டுக்கு முன் வடிவேல் என்பவருடன் திருமணமானது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில், தனது 9 வயது மகள் தனன்யாவுடன் அமுதா வசித்து வருகிறார். பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக அமுதா பணிபுரிந்தார். அதே பள்ளியில் தனன்யா 5ம் வகுப்பு படித்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பூவிழி திடீரென வீட்டைவிட்டு வெளியேறினார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மல்லிகாவும், அமுதாவும் மனவேதனையில் இருந்தனர். நேற்று காலையில் நீண்ட நேரமாக மல்லிகா வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ஒரு அறையில் மல்லிகாவும், மற்றொரு அறையில் அமுதா, தனன்யா ஆகியோரும் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.தகவல் அறிந்து பெருந்துறை போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், பூவிழி, காதலனுடன் ஓட்டம் பிடித்ததும், இதனால் ஏற்பட்ட மன வேதனையில் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்….

The post காதலனுடன் இளம்பெண் ஓட்டம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: பெருந்துறை அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Vuluthara ,Chinnasamy ,Mallika ,Erode District Purudra Vatuapalayam ,Amudah ,
× RELATED குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை