×

இலங்கை அருகே நிலநடுக்கம் எதிரொலி; திருச்செந்தூர் கடலில் புனித நீராட திடீர் தடை: 3 மணி நேரத்திற்கு பின் அனுமதி

உடன்குடி: இலங்கைக்கு தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது 6.2 ரிக்டர் அளவாக பதிவானது. இந்நிலையில் மீன்வளத்துறை அறிவிப்பின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டதுடன் புனித நீராடிய பக்தர்கள் கடலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது கந்தசஷ்டி திருவிழா நடந்து வரும் வேளையில் பல்லாயிரணக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விரதம் இருக்கும் பக்தர்கள் இருவேளை கடலில் புனித நீராடுவது வழக்கம். அவர்கள் குளிக்க திடீரென தடை விதிக்கப்பட்டதால் பரபரப்பான நிலை காணப்பட்டது. இந்நிலையில் 3 மணி நேரத்திற்குப் பின் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்குள் செல்லாமல் பாதுகாப்பான முறையில் புனித நீராடி செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து பக்தர்கள் கடலில் புனித நீராடி வருகின்றனர்.

The post இலங்கை அருகே நிலநடுக்கம் எதிரொலி; திருச்செந்தூர் கடலில் புனித நீராட திடீர் தடை: 3 மணி நேரத்திற்கு பின் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Tiruchendur sea ,Ebengudi ,Indian Ocean south-east of ,Tiruchendur ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...