×

இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் 2ம் இடம் பிடித்த கார்த்திக் அழகனை நேரில் அழைத்து பாராட்டினார் காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் 2ம் இடம் பிடித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சான்றிதழ் பெற்ற விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் அழகனை நேரில் அழைத்து பாராட்டினார். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) 08.11.2022 முதல் 13.11.2022 வரை தில்லியில் நடத்திய அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் (All India Finger Print Board Exam), தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 233 நபர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்வில், சென்னை பெருநகர காவல், புனித தோமையர்மலை விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் திரு.மா.கார்த்திக் அழகன் என்பவர் கலந்து கொண்டு, 214 மதிப்பெண்கள் பெற்று இத்தேர்வில் 2ம் இடம் பிடித்தார்.

இது தொடர்பாக கடந்த 06.11.2023 மற்றும் 07.11.2023 ஆகிய 2 நாட்கள் புது தில்லியில் நடைபெற்ற 24வது அகில இந்திய விரல்ரேகை பிரிவு இயக்குநர்கள் மாநாட்டில், மாண்புமிகு, மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தேசிய அளவிலான இத்தேர்வில் 2ம் இடம் பிடித்த விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் திரு.மா.கார்த்திக் அழகன் என்பவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் தேசிய அளவிலான விரல்ரேகை பிரிவு தேர்வில் 2ம் இடம் பிடித்து சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்த விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் திரு.மா.கார்த்திக் அழகனை இன்று (14.11.2023) நேரில் பாராட்டினார்.

The post இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் 2ம் இடம் பிடித்த கார்த்திக் அழகனை நேரில் அழைத்து பாராட்டினார் காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.

Tags : Karthik Alaghan ,Chennai ,Commissioner ,Chennai Metropolitan Police ,Karthik Alagan ,India ,
× RELATED டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர்...