×

திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் விலிங் செய்தபடி பட்டாசு வெடித்து பந்தா காட்டிய இளைஞர் கைது..!!

திருச்சி: திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் விலிங் செய்துகொண்டே பட்டாசு வெடித்த இளைஞர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்தது சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசிடம் சிக்காமல் இருக்க ஹெல்மெட் அணிந்தவாறு இளைஞர் மணிகண்டன், பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்தார். சாகசம் என்ற பெயரில் தங்களது உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்தது.

இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினர். இதனிடையே, பைக்கில் வீலிங் செய்தவாறு மணிகண்டன் பட்டாசு வெடித்த நிலையில் விதிமீறலுக்கு உதவியதாக இளைஞர் அஜய் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பைக் வீலிங் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 3 நாட்களாக தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீஸ் அதிரடியாக கைது செய்தது. திருச்சி சுற்றுவட்டார ஊர்களில் பைக் வீலிங் சம்பவத்தில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் விலிங் செய்தபடி பட்டாசு வெடித்து பந்தா காட்டிய இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Trichy-Chidambaram National Highway ,Trichy ,Manikandan ,Dinakaran ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து