×
Saravana Stores

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரும் பொறுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 3 ராஜபக்சே சகோதரகள் மற்றும் இலங்கை முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் , பேராசிரியர் லட்சுமன், நிதியமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஜயசுந்தர, மத்திய வங்கியின் நாணயசபை உறுப்பினர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை வர்த்தக சம்மோளன முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன மற்றும் பலர் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு விசாரணை கோரி தாக்கல் செய்த 2 அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியது. நீதியரசர்களில் பெரும்பான்மையானவர்களின் நிலைபட்டின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதன் விளைவே பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம் என நீதிபதிகள் கூறினர்.

The post இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரும் பொறுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mahinda Rajapakse ,Gotabaya Rajapakse ,Basil Rajapakse ,Sri Lanka ,Supreme Court ,Colombo ,Former ,president ,minister ,
× RELATED வேட்புமனு தாக்கல் 15ம் தேதி தொடங்கும்...