×

கே.எல்.ராகுலுக்கு டெத் ஓவர்களில் பவுலிங் செய்வது சாதாரணமல்ல: தெ.ஆ. மாஜி இம்ரான் தாஹிர் பேட்டி

மும்பை: தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியில் காயத்திற்கு பின் கம்பேக் கொடுத்துள்ள கேஎல் ராகுல் பேட்டிங்கில் ஏராளமான மாற்றங்களை செய்துள்ளார் என்று நினைக்கிறேன். இதற்கு முன்பாக ஆடிய ஷாட்களில் கூட ஏராளமான மாற்றங்களை செய்துள்ளார். இதன் மூலம் கேஎல் ராகுல் முழுமையான வீரராக மாறி இருக்கிறார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் ஆடிய ஷாட்கள் மிரட்டலாக இருந்தது. அதிலும் பார்க்காமலேயே அடிக்க அந்த ஷாட் வேற லெவலில் இருந்தது. ஒவ்வொரு பந்தையும் பேட்டின் மிடில் பகுதியில் விளாசி தள்ளுகிறார்.

கேஎல் ராகுலை போன்ற வீரர்களுக்கு டெத் ஓவர்களில் பவுலிங் செய்வது சாதாரண விஷயமல்ல. ஏனென்றால் கேஎல் ராகுலிடம் கட் ஷாட் இருக்கிறது. அவரால் மிட் ஆன், மிட் ஆஃப் மற்றும் மிட் விக்கெட் திசையில் எளிதாக ஷாட்களை அடிக்க முடியும். அதேபோல் ஸ்கூப் ஷாட்களை ஆட கூடியவர். வழக்கமாக களமிறங்கிய பின் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி பின் அதிரடிக்கு மாறக் கூடியவர். ஆனால் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே அதிரடிதான். இதன் மூலம் டாப் ஆர்டர் வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய மிடில் ஆர்டர் வீரர்கள் அதிரடியில் மிரட்ட தயாராக இருப்பதும் தெரிய வந்துள்ளது’’ என்றார்.

The post கே.எல்.ராகுலுக்கு டெத் ஓவர்களில் பவுலிங் செய்வது சாதாரணமல்ல: தெ.ஆ. மாஜி இம்ரான் தாஹிர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : KL ,Rahul ,Maji Imran Tahir ,Mumbai ,South ,Africa ,Imran Tahir ,Dinakaran ,
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ