×

ரோகித், கோஹ்லி, கில்லை வீழ்த்தினால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம்: மாஜி நியூசி. வீரர் ரோஸ் டைலர் சொல்கிறார்

மும்பை : ஐசிசி உலக கோப் பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி நாளை தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஸ் கூறுகையில், “இந்தியா நியூசிலாந்தை முதல் அரை இறுதியில் எதிர்கொள்ள போகிறது. இந்த தருணத்தில் 2019 ஆம் ஆண்டு அரையிறுதியில் என்ன நடந்தது என்பது குறித்து யோசிக்காமல் இருக்க முடியாது. 4 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல் தான் இந்தியா நல்ல பார்மில் அரை இறுதிக்கு சென்றது. ஆனால் இம்முறை நாங்கள் பாகிஸ்தானுடன் ரன் ரேட் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைத்து கடுமையாக போராடி தான் சென்றோம்.

இம்முறை இந்திய அணி உலக கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இந்தியாவுக்கு நிச்சயமாக நியூசிலாந்தை எதிர்கொள்ளும்போது பயம் வரும். ஆனால் 2019ஆம் ஆண்டு கொஞ்சம் வித்தியாசமான சூழலாக இருந்தது. மழை நன்றாக பெய்தது. இதனால் ஆட்டம் 2 நாட்களுக்கு நடைபெற்றது. நான் முதல் நாளில் நாட் அவுட் ஆக இருந்தேன். அதுவும் அரை இறுதியில் அடுத்த நாள் விளையாட செல்லும் போது முதல் நாள் எனக்கு தூக்கமே வரவில்லை. இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நியூசிலாந்தின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொண்டால் அது அவர்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கும். முதல் 10 ஓவர் இரண்டு இன்னிங்சிலுமே மிகவும் முக்கியம். நியூசிலாந்து வீரர்கள் முதல் பத்து ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் அது கடும் நெருக்கடியை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் இந்திய அணி இந்த முதல் மூன்று வீரர்களை நம்பி தான் இருக்கிறது.

உலகின் நம்பர் ஒன் வீரராக கில், ரோகித் சர்மா, விராட் கோஹ்லி என மூன்று வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் விக்கெட்டை வீழ்த்தினால் நடுவரிசை வீரர்கள் பேட்டிங் செய்ய வருவார்கள். அவர்களுக்கு கடும் நெருக்கடியை நியூசிலாந்து வீரர்களால் ஏற்படுத்த முடியும். இதேபோன்று இந்தியா பந்து வீசும்போது முதல் 10 ஓவர் சிராஜ், ஷமி ஆகியோர்களுக்கு எதிராக விக்கெட்டுகளை இழக்காமல் நியூசிலாந்து வீரர்கள் விளையாட வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு விக்கெட் கிடைத்தால் நல்ல உத்வேகத்துடன் பந்துவீச தொடங்கி விடுவார்கள். அந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் நன்றாக செயல்படுவார்கள். ஆனால் உங்கள் கையில் விக்கெட்டுகள் இருந்தால் ரன் குவிப்பது என்பது மிகவும் ஈசியாக இருக்கும். அரையிறுதி போட்டியில் ரச்சின் ரவீந்திராவுக்கு மிகவும் பெரிய நாளாக இருக்கும்’’ என்றார்.

The post ரோகித், கோஹ்லி, கில்லை வீழ்த்தினால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம்: மாஜி நியூசி. வீரர் ரோஸ் டைலர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Rohit ,Kohli ,Gill ,India ,Maji Newsi ,Ross Tyler ,MUMBAI ,ICC World Cup 2018 cricket ,Wankhede stadium ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!