×

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது காங்கிரஸ்: ப.சிதம்பரம்

டெல்லி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது காங்கிரஸ் கட்சியே என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு எப்பொழுது அமலுக்கு வந்தது என்ற உண்மைகளைத் தெரிந்து கொள்வோம். 1951ஆம் ஆண்டு சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏதுவாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. அதை நிறைவேற்றியது காங்கிரஸ் அரசு.

1992-1993 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. அதைச் செய்தது காங்கிரஸ் அரசு. 2006ம் ஆண்டில் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. அதைச் செய்தது காங்கிரஸ் அரசு” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது காங்கிரஸ்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Congress ,P Chidambaram ,Delhi ,P.Chidambaram ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...