×

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்களும் கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 செமீ மழை பெய்துள்ளது என்றும் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.

கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம் என்றும் தெரிவித்தார். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார். அனைத்து துறைகளும் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் மழை காரணமாக நேற்று 4 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. தூத்துக்குடியில் 2 குடிசை வீடுகள், நெல்லை, நாகையில் தலா ஒரு குடிசை வீடு சேதம் அடைந்துள்ளதகாவும் தெரிவித்தார். 400-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வானிலை மையத்துடன் இணைந்து வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் நேற்று மழை பதிவாகியுள்ளது. மழை பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். 27 மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 169 நிவாரண் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 22 சுரங்கப்பாதைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளன. கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மழைப்பொழிவு அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்களில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,K. K. S. S. R. ,Ramachandran ,Chennai ,Disaster Management Department ,K. K. S. S. R. Ramachandran ,
× RELATED முடித்து வைக்கப்பட்ட சொத்துகுவிப்பு...