×

இரணியல் அருகே பெண் அரசு ஊழியர் குளிப்பதை செல்போனில் படம் பிடிப்பு

*அண்ணன், தம்பி கைது

திங்கள்சந்தை : இரணியல் அருகே அரசு பெண் ஊழியர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த அண்ணன் தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த 40 வயது பெண் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டில் உள்ள குளியல் அறையில் பெண் குளித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது யாரோ மர்ம நபர்கள் செல்போனில் படம் பிடிப்பதை கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் சத்தம் போட்டு உள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து உள்ளனர். அதற்குள் இளைஞர்கள் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.பின்னர் பக்கத்தில் உள்ள பனைமர தோப்பில் பதுங்கி உள்ளனர். அப்போது தான் செல்போனில் படம் பிடித்தவர்கள் தோப்புக்கு சொந்தமான மொட்டவிளையை சேர்ந்த அண்ணன்- தம்பிகளான செல்லத்துரை (33), சின்னத்துரை (28) என்பது தெரியவந்தது.

2 பேரும் தோப்புக்கு வருகிறோம் என்று கூறி அடிக்கடி பெண் குளிப்பதை மறைந்து நின்று கொண்டு பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்துபெண் அரசு ஊழியர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்லத்துரை, சின்னத்துரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இரணியல் அருகே பெண் அரசு ஊழியர் குளிப்பதை செல்போனில் படம் பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Iranial ,Dinakaran ,
× RELATED இரணியல் அருகே வாலிபர் திடீர் மாயம்