×

கேரளாவில் 5 வயது சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை: எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் 5 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் ஆலுவாவில் கடந்த ஜூலை மாதம் 5 வயது சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காரா என்ற இடத்தில் தம்பதி வசித்து வந்தனர். இவர்களின் 5 வயது மகள் கடந்த ஜூலை மாதம் திடீரென மாயமானாள். இதனால், பதறிப்போன பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுமியை ஒருவன் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் சல்லடை போட்டு பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. பிறப்பு உறுப்புகளிலும் காயங்கள் இருந்தன. கேரளா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை கடத்தியவன் பீகார் மாநிலத்தை சேர்ந்த அசாஃபக் என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை அசாஃபக் ஒப்புக்கொண்டான். 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதும் பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. நாட்டையே உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி அசாஃபக் ஆலத்துக்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 26 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு குற்றம் நடந்த 110-வது நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கேரளாவில் 5 வயது சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை: எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : KERALA ,ERNAKULAM POXO ,COURT ,Thiruvananthapuram ,Ernakulam, Kerala ,Ernakulam Boxo Special Court ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு