×

மழைக்காலம் முடிந்ததும் இனி சனிக்கிழமைகளில் வாரம்தோறும் பள்ளிகள் செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: மழைக்காலம் முடிந்ததும் இனி சனிக்கிழமைகளில் வாரம்தோறும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர், டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு மற்றும் மாலை நேரங்களில் சென்னை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும். இதனிடையே, தொடர் மழையால் இன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழைக்காலம் முடிந்ததும் இனி சனிக்கிழமைகளில் வாரம்தோறும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் விடப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

The post மழைக்காலம் முடிந்ததும் இனி சனிக்கிழமைகளில் வாரம்தோறும் பள்ளிகள் செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Education ,Chennai ,Delta ,Department of School Education ,Dinakaran ,
× RELATED காவிரி விவகாரம் தொடர்பாக நாளை...