×

உதகை – குன்னூர் இடையே 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது; சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்..!!

நீலகிரி: உதகை – குன்னூர் இடையே 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணசீட்டு பெற்று உற்சாகமாக பயணித்து வருகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள பிரசித்திபெற்ற சுற்றுலா தளங்களை கண்டு ரசிப்பதுடன் மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

யூனஸ்க்கோ அந்தஸ்து பெற்ற பழமையான இந்த மலை ரயிலில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதினால் தினந்தோறும் சுற்றுலா பயணிகளுக்காகவே உதகையில் இருந்து குன்னூருக்கும், உதகையில் இருந்து மேட்டுபாளையத்துக்கும் மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் – உதகை வரை மலை ரயில் சேவை நவ.16 வரை ரத்து செய்யப்பட்டது.

கடந்த 10ம் தேதிக்கு பின் கனமழை எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக உதகை – குன்னூர் இடையே இயக்கப்பட்ட மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. நேற்று மாலை வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் உதகை – குன்னூர் இடையே 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிப்பதற்காக உதகை ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மலை ரயிலில் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.

The post உதகை – குன்னூர் இடையே 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது; சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்..!! appeared first on Dinakaran.

Tags : Utagai ,Coonoor ,Nilgiris ,Uthagai ,Utkai ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை நிறுத்தம்