×

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் அவசர கடிதம்

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் அவசர கடிதம் எழுதியுள்ளார். இன்று கடலூர், விழுப்புரம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், நவ.16, 17, ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், எனவே பேரிடர்களை கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும், முழு மாவட்ட நிர்வாகங்களை தயார்படுத்தவும், கனமழை முதல் மிக கனமழை காரணமாக ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க தேவையான போதுமான தயார் நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளார்.

The post கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் அவசர கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Revenue Administrative Commissioner ,District Collectors ,Chennai ,Tamil Nadu Revenue Administrative ,Commissioner ,District ,
× RELATED தென்மேற்கு பருவமழை: ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை