×

கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி நெல்லையப்பர் கோயிலில் இன்று தங்க பல்லக்கில் சொக்கர் எழுந்தருளினார்

நெல்லை: கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி நெல்லையப்பர் கோயிலில் ெசாக்கர் தங்க பல்லக்கில் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலையில் நடந்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவலாயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆனித்தேரோட்ட திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி இன்று அதிகாலை 4.40 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமி திருப்பள்ளி எழுச்சி நடந்தது. பின்னர் பள்ளியறை சொக்கர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி சுவாமி நெல்லையப்பர் கருவறை சென்றடையும் வைபவம் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதுபோல் இரவு ராக்கால பூஜை முடிந்ததும் பள்ளியறை சொக்கர் சுவாமி நெல்லையப்பர் தங்க பல்லக்கில் பள்ளியை எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. கார்த்திகை மாதம் முழுவதும் திருவனந்தலையொட்டி தங்க பல்லக்கில் சுவாமி சொக்கநாதர் பள்ளியறை எழுந்தருளும் வைபவம் இடம்பெறும். பிற சிவன் கோயில்களில் மார்கழி மாதம் திருபள்ளி எழுச்சி சிறப்பு வழிபாடு நடைபெறும். நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை மாதம் திருப்பள்ளி எழுச்சி நடைபெறுவது வழக்கமாகும்….

The post கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி நெல்லையப்பர் கோயிலில் இன்று தங்க பல்லக்கில் சொக்கர் எழுந்தருளினார் appeared first on Dinakaran.

Tags : Chokar ,Nelliyapar ,Karthiga ,Sezakkar ,Karthiga Monasturbam ,Tamil Nadu ,Goosebar Temple ,
× RELATED அத்தையை குத்தி கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை