×

அயன் பட பாணியில் ரூ.1 கோடி தங்கம் கடத்தல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு நேற்றுமுன்தினம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆண் பயணி ஒருவர், அயன் படம் பாணியில் தான் அணிந்திருந்த பேன்ட்டில் பெல்ட் அணியும் இடத்தில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று அவரிடமிருந்து 700 கிராம் எடையிலான 7 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 94கிராம் எடையிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.47 லட்சத்து 75 ஆயிரத்து 400. அதேபோல், துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்தது. அதில் ஆண் பயணி ஒருவர் ஆசன வாயில் மறைத்து கடத்திய 995 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.60 லட்சத்து 42 ஆயிரத்து 685.

The post அயன் பட பாணியில் ரூ.1 கோடி தங்கம் கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Air India Express ,Singapore ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்...