×

அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரையில் குளிக்க 11வது நாளாக தடை

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 11வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பிரசித்தி பெற்ற கும்பக்கரை அருவி உள்ளது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து இயற்கை எழில் சூழ்ந்த அருவியில் குளித்துவிட்டு செல்வர். இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவமழை குறைந்த போதிலும், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 11வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க வனத்துறை விதித்த தடை தொடர்கிறது. இந்நிலையில், தீபாவளி விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று வந்த சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

The post அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரையில் குளிக்க 11வது நாளாக தடை appeared first on Dinakaran.

Tags : Kumbakarai ,Periyakulam ,Kumbakarai Falls ,Diwali ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்