×

சிக்கி முக்கி சுண்டல்

தேவையானவை:

வறுத்து தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை,
ஒன்றிரண்டாக பொடித்த பொட்டுக்கடலை,
வறுத்த எள், ரவை,
கோதுமை மாவு – தலா ¼ கப்,
கடுகு, உளுந்து,
பெருங்காயம்,
மிளகு,
சீரகத் தூள் – தலா ¼ டீஸ்பூன்.
எண்ணெய், உப்பு,
கறிவேப்பிலை,
மல்லித்தழை,
தேங்காய் துருவல் – தேவைக்கேற்ப.

செய்முறை:

கடாயில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பு, மிளகு, சீரக தூள், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, மாவு, எள், வேர்க்கடலை, ரவை, பொட்டுக்கடலை மாவு சேர்த்து கெட்டியாக கிளறி வெந்த பின் இறக்கவும். ஆறிய பிறகு கோலி உருண்டைகள் போல் எண்ணெய் தொட்டு உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து உருட்டிய உருண்டைகளை கொட்டி கிளறவும். மல்லித்தழை, தேங்காய்துருவல் சேர்த்து இறக்கவும். சிக்கி முக்கி சுண்டல் தயார்.(உப்பு, மிளகுத்தூள், தாளிதம் தவிர்த்து, உருட்டிய உருண்டைகளை பாலில் போட்டு சர்க்கரை கலந்தும் செய்யலாம். பால் கொழுக்கட்டை ரெடி.

The post சிக்கி முக்கி சுண்டல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பரங்கிக்காய் சூப்