×

காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கியமான 4 மருத்துவமனைகள் மீது குறி

இஸ்ரேல்: காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையின் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் உயிரிழந்து விட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள அல் ஷிஃபா, அல்குட்ஸ் உள்ளிட்ட 4 பெரிய மருத்துவமனைகள் மீது குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அல் ஷிஃபா மருத்துவமனையில் 15 ஆயிரம் பேர் உள்ளனர்.

மருத்துவமனையில் குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் எரிபொருள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்து விட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைகள் மின்சாரம் தட்டுப்பாடு காரணமாக வெளியே வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது காசாவில் சுகாதார கட்டமைப்பே இல்லை என அதிகரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் எரிபொருள் தீரவில்லை என கூறிய இஸ்ரேல் ராணுவம் அது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் ராணுவவீரர்கள் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு எரிபொருளை விநியோகம் செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. வீடுகளை இழந்த காசா மக்கள் நிர்கதியாக வீதிகளில் நிற்கின்றனர். குழந்தைகள், முதியவர்கள் உடலில் காயங்களுடன் வாகனங்களிலும் நடந்தும் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர். எனவே மக்களின் நலன் கருதி உடனடியாக இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கியமான 4 மருத்துவமனைகள் மீது குறி appeared first on Dinakaran.

Tags : Israel ,Al Shifa ,Gaza ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...