×

தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஒரே நாளில் 364 அவசர அழைப்புகள்: தீயணைப்புத் துறை தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 364 அவசர அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர். சென்னை, நாகை, கோவை, தேனி, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று 364 அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக மொத்தம் 254 இடங்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. தீ விபத்தில் சிக்கி உள் நோயாளிகளாக 47 பேரும், புற நோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் பட்டாசுகள் தொடர்பான 102 அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். தீபாவளியையொட்டி நேற்று சென்னையில் 148 இடங்களில் பட்டாசுகளால் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்துகளால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஒரே நாளில் 364 அவசர அழைப்புகள்: தீயணைப்புத் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Diwali ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...