×

தீபாவளி கொண்டாட்டம் எதிரொலி!: சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு.. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்..!!

சென்னை: தீபாவளி காரணமாக பட்டாசுகளை வெடித்ததில் சென்னையில் 3வது நாளாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை நேற்று இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விடிய விடிய பட்டாசுடன் தீபாவளி பண்டிகை களைகட்டியது. இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமாக சென்றுள்ளது. குறிப்பாக சென்னையில் பல இடங்களிலும் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. காற்று மாசுபாட்டின் தர குறியீடு என்பது ஒட்டுமொத்தமாக காலை 8 மணி நிலவரப்படி 256 இருப்பதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்ததால் காற்றின் தரக்குறியீடு உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மணலியில் காற்றின் தரக்குறியீடு 322ஆக பதிவாகியுள்ளது. மணலி, வேளச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 300ஐ கடந்து மிக மோசமாக பதிவாகியுள்ளது. ஆலந்தூர், அரும்பாக்கம், ராயபுரம் பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு மோசமாக உள்ளது. ஒருவர் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 சிகிரெட்டை புகைப்பதற்கு சமமாக இந்த காற்று மாசு பாதிக்கப்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை பாதிப்பு உள்ளிட்டவைகளால் மக்கள் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. சென்னையில் எங்கு பார்ப்பினும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. சென்னையில் பொதுமக்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே செல்லுவதை பெருமளவு தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு வெளியே சென்றால் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணிக்கின்றனர்.

The post தீபாவளி கொண்டாட்டம் எதிரொலி!: சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு.. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Diwali. ,Diwali Festival ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...