×

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் சந்தித்து பேசினார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பரஸ்பரம் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

அதேபோல், ஜனாதிபதி திரவுபதி முர்முவை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிரிதி ராணியும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். முன்னதாக இன்று காலை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

 

The post ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,President ,Thravupathi Murmu ,New Delhi ,Vice President ,Jagdeep Tankar ,Thravupati Murmuh ,Drawupathi Murmuwai ,PM ,Modi ,Tirupati Murmu ,Dinakaran ,
× RELATED இயந்திரத்தை நம்பி பிரதமர் மோடி...