×

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: 40 தொழிலாளர்களை மீட்கும்பணிகள் தீவிரம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா-தண்டல்ஹன் பகுதியை இணைக்கும் வகையில் மலையில் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இன்று அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில், 40 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, சுரங்கப்பாதையின் 150 மீட்டர் தொடக்கப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால், சுரங்கத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்த 40 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர்.தகவலறிந்து விரைந்து வந்த தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேவேளை, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியாத நிலையில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

The post உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: 40 தொழிலாளர்களை மீட்கும்பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Subway collapse in ,Uttarakhand ,Dehradun ,Yamunothri National Highway ,Yamunothri Tham ,Subway ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ