×

மனைவியை கொன்று தப்பியவர் காதலி தற்கொலையில் தேடப்படும் குற்றவாளி: போலீசார் விசாரணையில் அம்பலம்

சென்னை: பூந்தமல்லி கிழக்கு மாடவீதி, ஸ்கூல் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் ஆனந்தராஜ் (30). இவரது மனைவி நந்தினி (27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் பண்ருட்டி. கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இங்கு வாடகைக்கு குடிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  நந்தினி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஆனந்தராஜை தேடி வருகின்றனர். முற்கட்ட விசாரணையில், ஆனந்தராஜ் தனது திருமணத்தை மறைத்து, பண்ருட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் ஆனந்தராஜை பண்ருட்டி போலீசார் தேடினர். போலீசாரிடம் இருந்து தப்பவே மனைவி, குழந்தைகளுடன் பூந்தமல்லியில் வந்து தங்கியுள்ளார்.  இது  தொடர்பாக கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவியை கொன்றுவிட்டு 3 குழந்தைகளுடன் ஆனந்தராஜ் மாயமானது தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post மனைவியை கொன்று தப்பியவர் காதலி தற்கொலையில் தேடப்படும் குற்றவாளி: போலீசார் விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Anandaraj ,School Street ,East Madaveedi, Poontamalli ,Nandini ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு