×

அரியானாவில் கள்ள சாராயம் குடித்த 19 பேர் பலி

அம்பாலா: அரியானாவில் கள்ள சாராயம் குடித்த 19பேர் பலியாகினர். இதுதொடர்பாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியானாவின் யமுனா நகர் மாவட்டத்தில் செயல்படாத தொழிற்சாலை ஒன்றில் சட்டவிரோதமாக கள்ள சாராயம் தயாரித்து விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கி குடித்த அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தனர். யமுனா நகர் மாவட்டத்தின் மண்டேபரி, பன்ஜெட்டோ கா மஜ்ரா, பூஸ்கர், சரண் ஆகிய கிராமங்களை சேர்ந்த சிலரும் கள்ள சாராயம் குடித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து கள்ள சாராய பலி எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. கள்ள சாராயம் தயாரிக்கப்பட்ட இடத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், டிரம்கள், சாராயம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கள்ள சாராயத்தை தடுக்க மாநில பாஜ அரசு தவறி விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

The post அரியானாவில் கள்ள சாராயம் குடித்த 19 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Haryana ,Ambala ,Ariana ,Yamuna ,
× RELATED அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள்