×

இந்தியா முழுவதும் மக்களாட்சி சகாப்தத்தை தொடங்குவதற்கான நேரம்: ராகுல் காந்தி வீடியோ வெளியீடு

புதுடெல்லி: நாடு முழுவதும் மீண்டும் மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியின் சகாப்தத்தை தொடங்கும் நேரம் இது’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வீடியோ பதிவில் கூறி உள்ளார். தெலங்கானாவில் சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒருவரின் வீட்டிற்கு ராகுல் காந்தி சமீபத்தில் சென்றிருந்தார். அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:‘மிக முக்கியமாக ஒலிக்க வேண்டிய குரல், வரிசையின் கடைசியில் இருக்கிறது’ என மகாத்மா காந்தி கூறி உள்ளார். கும்மரி சந்திரய்யாவின் குரலும் அப்படிப்பட்டது.

இவர் தெலங்கானாவை சேர்ந்த சிறு விவசாயி. அன்றாட வாழ்க்கைக்கே போராடிய அவர், கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டார். தனது அன்பான குடும்பத்தை விட்டுச் சென்று விட்டார். இவரை காப்பாற்றுவதில் பிஆர்எஸ் அரசு தோல்வி அடைந்து விட்டது. சரியான நேரத்தில் அரசு உதவியிருந்தால், கும்மரி சந்திரய்யா இன்று உயிருடன் இருந்திருப்பார். ஆனால், சர்வாதிகார எண்ணம் கொண்ட பிஆர்எஸ், பாஜ போன்ற கட்சிகளால் மக்களின் தேவைகளை வழங்க இயலாது. இந்த விஷயத்தில் காங்கிரசால் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர முடியும். வரிசையில் கடைசியாக நிற்கும் கோடிக்கணக்கான குரல்களின் ஆசைகள் தேவைகளின் வெளிப்பாடுதான் காங்கிரசின் தேர்தல் உத்தரவாதங்கள்.

கும்மரி திருப்பத்தமா இன்னமும் தனது குடும்பம் கடன் சுமையால் போராடுவதாக கூறினார். இந்த நிலை மிக விரைவில் மாறும். மக்களை மையமாக கொண்ட காங்கிரஸ் அரசு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி, இலவச பஸ் பயணம், ரூ.500க்கு காஸ் சிலிண்டர் வழங்கும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கும். நமது அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயத்தை உறுதி செய்வதே எங்களின் இப்போதைய யுத்தம். இந்தியா முழுவதும் மீண்டும் மக்களை மையமாக கொண்ட ஆட்சியின் சகாப்தத்தை தொடங்கும் நேரம் இது.இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.

The post இந்தியா முழுவதும் மக்களாட்சி சகாப்தத்தை தொடங்குவதற்கான நேரம்: ராகுல் காந்தி வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.

Tags : India ,Rahul Gandhi ,New Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...