×

ரூ.58 கோடி சொத்து இருந்தும் தெலங்கானா முதல்வருக்கு சொந்தமாக கார் இல்லை: பிரமாண பத்திரத்தில் தகவல்

திருமலை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு கார் கூட இல்லை என்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் வருகிற 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் சந்திரசேகரராவ் (கே.சி.ஆர்) நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேலும், தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்து பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். இதில் சொத்துக்களில் ரூ.25.61 கோடி மதிப்புள்ள ரொக்கம், வைப்புத்தொகை, முதலீடுகள், ரூ.9.81 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், எச்யுஎப் உள்பட ரூ.35.42 கோடி உள்ளது. கேசிஆர் தம்பதியினரின் அனைத்து நிலையான சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.58,93,31,800. மொத்த கடன்கள் ரூ.24,51,13,631 என்று பிரமாண பத்திரத்தில் (தேர்தல் உறுதிமொழி) குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் கோடங்கல், காமாரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். கோடங்கல் சட்டபேரவை தொகுதியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், அவர் பெயரில் ரூ.3.76 கோடி சொத்து உள்ளது. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேவந்த்துக்கு ரூ.1,74,97,421 கோடி நிலையான சொத்துகளும், ரூ.2,02,69,000 கோடி அசையும் சொத்துகளும் இருப்பது தெரியவந்தது. ரேவந்த் மற்றும் மனைவி கீதாவுக்கு ரூ.9,44,64,000 கோடி சொத்து உள்ளது. இருவருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,30,19,901 கடன் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் காட்டப்பட்டது. ரேவந்த்துக்கு 2 வாகனங்கள் உள்ளன. ரேவந்த்திடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஒரு துப்பாக்கியும், ரூ.50,000 மதிப்புள்ள துப்பாக்கியும் உள்ளன. ரேவந்த் வழக்குகளின் விவரங்களின்படி அவர் மீது 36 வழக்குகள் உள்ளது.

The post ரூ.58 கோடி சொத்து இருந்தும் தெலங்கானா முதல்வருக்கு சொந்தமாக கார் இல்லை: பிரமாண பத்திரத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Telangana ,PM ,Thirumalai ,Chief Minister ,Chandrasekharara ,Election Commission ,Pramana ,Dinakaran ,
× RELATED தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில்...